இறைவன் : தாண்டேஸ்வரர் இறைவி : அங்காளம்மன் தீர்த்தம் : அக்னி தீர்த்தம் தல விருட்சம் : வில்வம், மயில் கொன்றை தலவரலாறு : போளூர், திருவண்ணாமலை, ஆரணி, செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் போன்ற நகரப் பகுதிகளை உள்ளடக்கிய மிகப் பரந்த பரப்பையே ஆதியில் தண்டகாருண்யம் என்று அழைத்தனர். தண்ட காருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும். தண்டகாருண்ய பகுதிகளே சோழ மண்டலத்தில் தொண்டை மண்டலம் மற்றும் நடுநாடுப் பகுதிகளாக கடையேழு வள்ளல்களால் ஆளப்பட்டன. கடையேழு வள்ளல்களின் பராம்பரியத்தில் வந்த ஒரு சிறந்த சிற்றரசனே மலையன் என்பவராவார். இவர் தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும், தண்ட காருண்ய பகுதிகள் பெரும்பாலும் பூமிக்கு மேல் மலைப்பகுதியைக் கொண்டதாகும். மேல் மலைப்பகுதியை...